close
Choose your channels

சர்வைவர் நிகழ்ச்சியில் இன்றைய டாஸ்க்: ஜிடிவி ராக்ஸ்

Saturday, September 18, 2021 • தமிழ் Comments

ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் சர்வைவர் நிகழ்ச்சி முதல் நாளிலிருந்து விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் செல்கிறது என்பதும் ஒவ்வொருக்கும் குழந்தைத்தனமாக இல்லாமல் ஒவ்வொரு வரையும் திறமையை சோதிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் இன்று சர்வைவர் நிகழ்ச்சியின் டாஸ்க் குறித்த புரமோ வீடியோ வெளியாகி உள்ளது. இதில் கடலின் நடுவில் வைக்கப்பட்டிருக்கும் ஒரு மரத்தில் காடர்கள் அணி மற்றும் வேடர்கள் அணி தனித்தனியாக நின்று கொண்டுள்ளனர்.

ஒரு பகுதியிலுள்ள போட்டியாளர் இன்னொரு பகுதிக்கு செல்ல வேண்டும். கீழே விழுந்தால் போட்டியிலிருந்து வெளியேற்றம் செய்யப்படுவார் என அர்ஜூன் எச்சரிக்கிறார். அந்த வகையில் இன்றைய டாஸ்க்கில் இருவர் கீழே விழுவது மட்டுமின்றி மற்றவரையும் கீழே விழ வைத்து விடுகின்றனர். இந்த டாஸ்க்கால் இன்றைய நிகழ்ச்சி விறுவிறுப்பாக இருக்கும் என்றும், ஜீடிவி ராக்ஸ் என்றும் இந்த புரமோ வீடியோவுக்கு கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz