ஒரு சிக்ஸரை மிஸ் செய்ததற்கு நன்றி: ராகுல் திவெட்டியாவுக்கு நன்றி கூறிய யுவராஜ்சிங்!
நேற்று நடைபெற்ற பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 223 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் 224 என்ற இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ராஜஸ்தான் அணி ஆரம்பம் முதலே அடுத்து ஆடியது. குறிப்பாக சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி 85 ரன்கள் எடுத்தார்
இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற 51 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. இந்த நிலையில் அதுவரை சிங்கிள் எடுக்க கூட திணறி கொண்டிருந்த ராகுல் திவெட்டியா, கார்ட்டர் வீசிய 18-வது ஓவரை விளாசினார். அந்த ஒரு ஓவரில் மட்டும் ராகுல் 5 சிக்சர்கள் அடித்தார். இன்னும் ஒரு சிக்ஸர் அவர் அடித்திருந்தால் யுவராஜ்சிங்கின் சாதனையை சமன் செய்த சாதனை நிகழ்ந்திருக்கும். ஆனால் ஒரு சிக்சரை அவர் தவறவிட்டார்.
இதுகுறித்து யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறிய போது ’ராகுல் திவெட்டி, நல்ல வேளை நீங்கள் அந்த ஒரு சிக்ஸரை மிஸ் செய்தீர்கள்’ என நன்றி தெரிவித்ததோடு, என்ன ஒரு அருமையான இன்னின்ங்ஸ்: ராஜஸ்தான் ராயல் மிக அபாரமாக விளையாடினார்கள். குறிப்பாக மயங்க் அகர்வால் மற்றும் சாம்சன் இன்னிங்ஸ் மிகவும் அபாரமானது என்று பாராட்டு தெரிவித்துள்ளார்
யுவராஜ் சிங்கின் இந்த ட்வீட்டுக்கு ஆயிரக்கணக்கானோர் லைக்ஸ்கள் மற்றும் ரீடுவிட்டுகளை குவித்து வருகின்றனர்.
Mr @rahultewatia02 na bhai na ?? thanks for missing one ball ! What a game congratulations to rr for a spectacular win !!! #RRvKXIP @mayankcricket great knock @IamSanjuSamson brilliant !
— Yuvraj Singh (@YUVSTRONG12) September 27, 2020