close
Choose your channels
aranmanai

ரஜினி படத்திற்கு முதல்முறையாக இசையமைக்கின்றாரா யுவன்ஷங்கர் ராஜா?

Friday, December 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

முதல் முறையாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார் என்பதும் தெரிந்ததே

இதனை அடுத்து அவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் ‘லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைத்து வருகிறார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் ரஜினியின் அடுத்த திரைப்படத்தை ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன் இயக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் ’லவ் டுடே’ வெற்றிக்குப் பின்னர் லைகா நிறுவனம் தயாரிக்கும் ரஜினியின் படத்தை பிரதீப் ரங்கராஜன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது லண்டனில் உள்ள லைகா அலுவலகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் இந்த படம் உறுதி செய்யப்பட்டால் ரஜினி - பிரதீப் ரங்கனதன் இணையும் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது.

பிரதீப் ரங்கநாதனின் முந்தைய படமான ’லவ் டுடே’ படத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை சூப்பராக இருந்ததை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் அடுத்த படத்திலும் தொடரும் என்று கூறப்படுகிறது. ரஜினியின் பல படங்களுக்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள நிலையில் முதல்முறையாக யுவன்ஷங்கர் ராஜா ரஜினி படத்திற்கு இசையமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment