close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

20 வருஷத்துல நீங்க தான் பெஸ்ட்: சிம்ரனின் நெகிழ்ச்சியான பதிவு!

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் மாதவனுடன் சிம்ரன் நடித்த ’ராக்கெட்டரி’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி பாசிட்டிவ் விமர்சனங்களை குவித்து வரும் நிலையில் மாதவனுடன் நடித்த அனுபவங்கள் குறித்து நெகிழ்ச்சியான பதிவை நடிகை சிம்ரன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

கே பாலச்சந்தர் இயக்கிய ’பார்த்தாலே பரவசம்’ மற்றும் மணிரத்னம் இயக்கிய ’கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய திரைப்படங்களில் மாதவனுடன் நடித்த சிம்ரன் தற்போது ’ராக்கெட்டரி’ படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது பதிவில் கூறிய போது ’பார்த்தாலே பரவசம்’ படத்தில் மாதவனுடன் நடித்த சிமி கேரக்டர், ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் மாதவனுடன் நடித்த இந்திரா கேரக்டரை அடுத்து தற்போது ’ராக்கெட்டரி’ படத்தில் நடித்த மிஸஸ் நம்பி நாராயணன் கேரக்டர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்றும் இந்த 20 வருடங்களில் மாதவன் கொஞ்சம்கூட மாறவில்லை என்றும் அவர் மிகச் சிறந்தவர் என்றும் பதிவு செய்துள்ளார்.

மேலும் உங்களுடன் திரையுலகை பகிர்ந்து கொண்டதோடு நீங்கள் இயக்கும் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் பெருமையாக இருந்தது என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார். அவருடைய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.