close
Choose your channels

ஐஸ்வர்யா ராஜேஷ் அடுத்த படத்தில் இணைந்த யோகிபாபு!

Thursday, April 1, 2021 • தமிழ் Comments

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் யோகி பாபு இணைந்துள்ள தகவல் தற்போது வெளிவந்துள்ளது

மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான திரைப்படம் ’தி கிரேட் இந்தியன் கிச்சன்’. இந்த படத்தின் தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் ஆர். கண்ணன் இயக்கி வரும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடியாக பாடகி சின்மயி கணவர் ராகுல் ரவீந்திரன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில் யோகிபாபு இணைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஜோ பேபி என்ற மலையாள இயக்குநர் இயக்கத்தில் நடிகை நிமிஷா சஜயன் நடிப்பில் மலையாளத்தில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற இந்தப் படம் தமிழிலும் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz