close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஆஸ்கார் விருதுக்கான போட்டியில் யோகிபாபு படம்!

Thursday, October 21, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகி பாபு நடித்த படம் ஒன்று ஆஸ்கார் விருது செல்லும் பட்டியலில் இடம் பெற்றிருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

உலக அளவில் நடிகர்களுக்கும் தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கௌரவமாக கருதப்படுவது விருது ஆஸ்கர் விருது என்பதும் இந்த விருதைப் பெறுவதற்கு ஒவ்வொரு நடிகர்களும் முயற்சி செய்வார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் இந்திய அளவில் சிறந்த படங்களை தேர்வு செய்து அதிலிருந்து ஒரு படத்திற்கு வேற்று மொழிக்கான ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்தியாவில் இருந்து 14 படங்கள் இந்த விருதுக்காக போட்டி போடுகின்றன. அதில் யோகி பாபு நடித்த ’மண்டேலா' என்ற படமும் ஒன்று என்பதும் இந்த போட்டியில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழ்ப்படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் சார்பில் ஏற்கனவே இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்கள் ஆஸ்கார் விருது பெற்றிருக்கும் நிலையில் மீண்டும் ஒரு ஆஸ்கார் விருது கிடைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.