close
Choose your channels

யோகிபாபு வீட்டுக்கு வந்த தேவதை: திரையுலகினர், ரசிகர்கள் வாழ்த்து!

Monday, October 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல காமெடி நடிகர் யோகிபாபுவுக்கு ஏற்கனவே ஆண் குழந்தை பிறந்த நிலையில் இன்று பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து அவருக்கு திரையுலகினர் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவர் யோகிபாபு என்பதும் அவர் சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. யோகிபாபு முக்கிய வேடத்தில் நடித்த ‘மண்டேலா’ தேசிய விருது பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு மஞ்சு மஞ்சு பார்கவி என்பவரை யோகி பாபு திருமணம் செய்த நிலையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. யோகி பாபு தீவிர முருக பக்தர் என்பதால் தனது மகனுக்கு விசாகன் என்று பெயர் வைத்தார். சமீபத்தில் யோகிபாபுவின் முதலாவது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் யோகி பாபு மனைவி மீண்டும் கர்ப்பமான நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. யோகி பாபு வீட்டிற்கு தேவதை ஒன்று வந்துள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் யோகிபாபு ‘யானை முகத்தான்’ உள்பட ஒருசில படங்களில் நாயகனாகவும், விஜய்யின் ‘வாரிசு’, சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ உள்பட சுமார் 20 படங்களில் காமெடி வேடத்திலும் நடித்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.