close
Choose your channels

யோகிபாபுவின் சூப்பர் பேட்டிங் ஸ்டைல்: வைரல் வீடியோ

Saturday, October 23, 2021 • தமிழ் Comments

தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவரான யோகிபாபு சிறந்த நடிகர் மட்டுமின்றி ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர் என்பதை பலமுறை பார்த்திருக்கிறோம். குறிப்பாக அவர் படப்பிடிப்பின் போது கிடைக்கும் இடைவேளையில் படக்குழுவினருடன் கிரிக்கெட் விளையாடும் வீடியோக்களை அவர் தனது சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார் என்பதும் அந்த வீடியோக்கள் வைரலாகி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன்னர் யோகிபாபு தனது டுவிட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பவுலிங் மற்றும் பேட்டிங் ஆகிய இரண்டிலுமே அசத்தும் காட்சிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

யோகி பாபுவின் இந்த வீடியோவுக்கு ’ரோஹித் சர்மாவை விட அருமையாக விளையாடுகிறீர்கள் தலைவா’ என்பது போன்ற கமெண்ட்ஸ்கள் பதிவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யோகி பாபு தற்போது தளபதி விஜய்யின் ’பீஸ்ட்’ தல அஜித்தின் ’வலிமை’ விஷாலின் ’வீரமே வாகை சூடும்’ சிவகார்த்திகேயனின் ‘அயலான்’, ஷாருக்கானின் ‘லயன்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz