close
Choose your channels
Por
Joshwa

'வந்தது ஓவியா இல்லடா, ஆவிடா... யோகிபாபு-ஓவியாவின் 'பூமர் அங்கிள்' டிரைலர்

Sunday, November 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

யோகி பாபு, ஓவியா உள்பட பலரது நடிப்பில் உருவாகி வரும் ‘பூமர் அங்கிள்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனர் மிஷ்கின் தனது சமூக வலைத்தளத்தில் ‘பூமர் அங்கிள்’ டிரைலர் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

யோகிபாபு, ஓவியா, ரோபோ சங்கர், தங்கதுரை, சோனா உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி இந்த படத்தை கார்த்திக் தில்லை என்பவர் இயக்கியுள்ளார். இந்த படம் முழுக்க முழுக்க காமெடி அம்சம் கொண்டது என்பதும் ஓவியாவின் கவர்ச்சி உள்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த படத்தில் இருப்பதாகவும் இந்த படத்தின் டிரைலரில் இருந்து தெரியவருகிறது

மொத்தத்தில் இந்த படம் முழுக்க சிரிக்க வைக்கும் காமெடி படம் என்பதும், இடையிடையே த்ரில்லான பேய்க்காட்சிகள் இருக்கும் என்பதும் டிரைலரில் இருந்து தெரிய வருகிறது. இந்த படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.