கிண்டல் செய்யாதீங்க: திமுக அமைச்சருக்கு அட்வைஸ் செய்த யாஷிகா ஆனந்த்!


Send us your feedback to audioarticles@vaarta.com


எந்த தொழிலும் தாழ்வானது அல்ல என்றும், எனவே பானிபூரி விற்பவர்களை கிண்டல் செய்யாதீர்கள் என திமுக அமைச்சருக்கு நடிகை யாஷிகா ஆனந்த் அட்வைஸ் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .
சமீபத்தில் திமுக அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களை சந்தித்தபோது ஹிந்தி தெரிந்தால் வேலை கிடைக்கும் என்று கூறுகின்றனர். ஆனால் ஹிந்தி தெரிந்தவர்கள் பானிபூரி தான் விற்பனை செய்கிறார்கள் என்று கூறியிருந்தார். அவரது இந்த பேச்சுக்கு சர்ச்சைக்குள்ளானது என்பதும் வட இந்திய மீடியாக்கள் அவருக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் தனது சமூக வலைத்தளத்தில் திமுக அமைச்சர் பொன்முடி அவர்களுக்கு அட்வைஸ் செய்யும் வகையில் ’ஒரு மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், அனைவருக்கும் வாழ்வதற்கு பணம் தேவைப்படுகிறது என்றும், அதனை சம்பாதிக்க ஏதாவது ஒரு தொழில் செய்கிறார்கள் என்றும் யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். மேலும் டீ விற்றவர் தான் இன்று நாட்டை ஆள்கிறார் என்றும், எனவே பானிபூர் விற்பனை செய்பவர்களை தயவுசெய்து கிண்டல் செய்யாதீர்கள் என்றும் கூறியுள்ளார். யாஷிகாவின் இந்த பதிவுக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கமெண்ட்ஸ் பதிவாகி வருகின்றன.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.