குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்து கொண்டிருந்தபோது தூக்கில் தொங்கிய இளம்பெண்!
குடும்பமே ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த குடும்பத்தின் இளம்பெண் ஒருவர் திடீரென தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
மும்பையைச் சேர்ந்த ஹர்ஷாலி என்ற பெண்ணுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து பெரும் கனவுகளோடு புகுந்த வீட்டிற்கு சென்ற ஹர்ஷாலிக்கு கணவரின் அண்ணிகளிடம் இருந்து கொடுமைகள் இருந்ததால் அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இந்த நிலையில் சமீபத்தில் 10 வருடங்களுக்குள் இறந்து போன மாமியாரின் பழைய புடவை கட்ட வேண்டுமென்றும் ஹர்ஷாலியை அவரது கணவரின் அண்ணிகள் வற்புறுத்தியதாக தெரிகிறது. பல ஆண்டுகளாக துவைக்காமல் அழுக்காக இருந்த புடவையை கட்ட முடியாது என்று ஹர்ஷாலி கூறியதால் அவருடைய கணவரின் அண்ணிகள் ஹர்ஷாலியை கொடுமைப் படுத்தியதாக தெரிகிறது
இதனால் மனம் உடைந்த ஹர்ஷாலி அன்று இரவு கணவர் மாமனார் மைத்துனர்கள் மற்றும் கணவரின் அண்ணிகள் ஐபிஎல் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தபோது திடீரென தனது அறைக்குச்சென்று தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இதன் பின்னர் சில மணி நேரங்கள் கழித்து மாமனார் தற்செயலாக ஹர்ஷாலி தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து பின்னர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்
இதுகுறித்து ஹர்ஷாலியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கணவரின் குடும்பத்தினரை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது