Spam மெயிலை பார்த்த பெண்ணிற்கு ஜாக்பாட்… 30 லட்சத்தைக் குவித்த அதிர்ஷ்டம்!


Send us your feedback to audioarticles@vaarta.com


அமெரிக்காவில் வசித்துவரும் பெண் ஒருவர் தன்னுடைய காணாமல் போன மின்னஞ்சல் ஒன்றை Spam மெயில் பாக்ஸில் தேடியிருக்கிறார். அதில் 3 மில்லியன் வென்றதற்கான தகவல் இருந்ததும் மகிழ்ச்சியில் தத்தளித்த சம்பவம் நடைபெற்றிருக்கிறது.
மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ஒக்லண்ட் கவுண்டியில் வசித்துவருபவர் 55 வயதான லாரா ஸ்பியர்ஸ். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு மெகா மில்லியன் ஆஃபர் லாட்டரி டிக்கெட்டை ஆன்லைனில் வாங்கியுள்ளார். இதைப் பற்றி மறந்தே போன அவர் தனக்கு வரவேண்டிய ஒரு மின்னஞ்சல் தகவலை இணையத்தில் தேடிக்கொண்டிருந்தபோது 3 மில்லியன் லாட்டரி அடித்திருக்கும் தகவலை அறிந்து கொண்டார்.
உண்மையில் லாரா வாங்கிய லாட்டரி டிக்கெட் வெறும் 2 மில்லியன் தொகையைக் கொண்டது. ஆனால் திடீரென்று மெகா ஆஃபர் லாட்டரின் பரிசுத்தொகையை உயர்த்தியதன் காரணமாக இவருக்கு 3 மில்லியன் அதாவது இந்திய மதிப்பில் 30 லட்சத்தை வென்றுள்ளார். இதுகுறித்து பேசிய லாரா இந்தத் தொகை முன்கூட்டியே நான் ஓய்வுப்பெறுவதற்கு உதவும் எனத் தெரிவித்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.