close
Choose your channels
siren
lal_salaam

'பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் இல்லையா? சோகமாக வெளியேறிவிட்டதாக தகவல்!

Sunday, April 10, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற உள்ளது என்பதும் இதற்கான புரமோ வீடியோக்களும் இன்று காலை முதல் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சிம்பு, பிக்பாஸ் வீட்டின் உள்ளே சென்று இறுதி போட்டியாளர்கள் 4 பேருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்தார்.

பாலாஜி, நிரூப், ரம்யா பாண்டியன் மற்றும் தாமரை ஆகிய நான்கு பேர்கள் பிக்பாஸ் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் நிலையில் இவர்களில் ஒருவர்தான் இன்று மாலை டைட்டில் வின்னர் ஆக அறிவிக்கப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தாமரை வெளியேறிவிட்டதாகவும் அவருக்கு அல்டிமேட் நிகழ்ச்சியில் 4வது இடம் தான் கிடைத்துள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியிலேயே டைட்டில் வின்னர் ஆக தாமரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் அவர் தான் டைட்டில் வின்னர் என பலர் கணித்திருந்தனர். ஆனால் அனைவரின் கணிப்புக்கும் ஏமாற்றம் அளிக்கும் வகையில் தாமரை தற்போது நான்காவது இடத்தை பிடித்து வெளியேறி இருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மீதி உள்ள மூவரில் டைட்டில் வின்னர் யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.