close
Choose your channels
Viruman
Laal

பிக்பாஸ் அல்டிமேட்: இந்த வாரம் எலிமினேஷன் ஆவது இவரா?

Friday, March 4, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் அல்டிமேட் என்ற 24 மணி நேர நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கிய நிலையில் சுரேஷ், சுஜா, ஷாரிக், அபினய், வனிதா ஆகியோர் வெளியேறிய நிலையில் தற்போது சுரேஷ் சக்ரவர்த்தி, சதீஷ் ஆகிய இருவரும் வைல்ட்கார்ட் எண்ட்ரியாக உள்ளே வந்து உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வார நாமினேஷனில் தாமரை, சினேகன், தாடி பாலாஜி, ஜூலி, சுருதி, அனிதா, அபிராமி ஆகிய 7 பேர் இடம்பெற்றுள்ள நிலையில் இதில் அதிக வாக்குகள் பெற்று தாமரைச்செல்வி முதலிடத்தில் இருப்பதாகவும் இதனை அடுத்து ஜூலி, அனிதா மற்றும் ஸ்ருதி ஆகியோர் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே மீதி உள்ள அபிராமி, பாலாஜி மற்றும் சினேகன் ஆகிய மூவரில் ஒருவர்தான் இந்த வாரம் வெளியேற அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பாக தாடி பாலாஜி வெளியேற அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது .

ஒரு பக்கம் கிராமத்து டாஸ்க்கில் பாலாஜி மற்றும் அபிராமி கணவன் மனைவியாக நடித்து வருகின்றனர் என்பதும் இன்னொரு பக்கம் நிரூப் மற்றும் ஸ்ருதி திருமணத்தை நடத்தி வைத்து கொண்டாட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொண்டாட்டத்தின் நடுவே இந்த வாரம் வெளியேறப் போவது யார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.