close
Choose your channels

நயன்தாரா - ரம்யா கிருஷ்ணன்: அம்மன் வேடத்தில் பெஸ்ட் யார்? 

Saturday, June 6, 2020 • தமிழ் Comments

தமிழ் சினிமாவில் இதுவரை பல அம்மன் திரைப்படங்கள் வந்துள்ளன என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்றுள்ளன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் அம்மன் வேடத்தில் கேஆர் விஜயா முதல் ஜூலி வரை பல நடிகைகள் நடித்துள்ளனர். கேஆர் விஜயா, பானுப்பிரியா, கௌசல்யா, மீனா என அம்மன் வேடத்தில் நடித்த நடிகைகளின் பட்டியலை நீட்டிக்கொண்டே போகலாம். இருப்பினும் இதுவரை அம்மன் வேடத்தில் நடித்தவர்களில் அம்மன் வேடம் மிகவும் பொருத்தமாக இருந்தது என்றால் அது ரம்யா கிருஷ்ணன் என்று சமூக வலைத்தள பயனாளிகள் கருத்து கூறியுள்ளனர்.

கடந்த 1995ஆம் ஆண்டு கோடி ராமகிருஷ்ணா இயக்கத்தில் வெளியான ‘அம்மன்’ திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன் நடித்த ’அம்மன்’ கேரக்டரை இன்னும் யாராலும் மறக்க முடியாது. ஆக்ரோஷம், கருணை என அம்மனை கண்முன்னே கொண்டு வந்திருப்பார் ரம்யா கிருஷ்ணன்.

இந்த நிலையில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்த ’மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் சமீபத்தில் நயன்தாராவின் அம்மன் வேடம் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் அம்மன் வேடத்தில் சிறந்தவர் ரம்யா கிருஷ்ணனா? நயன்தாராவா? என்ற வாத விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இதுவரை அம்மன் வேடங்களில் நடித்த நடிகைகளில் ரம்யா கிருஷ்ணன் தான் பெஸ்ட் என்றாலும் நயன்தாராவின் அம்மன் வேடம் எப்படி உள்ளது என்பதை ‘மூக்குத்தி அம்மன்’ படத்தைப் பார்த்த பின்னர்தான் சொல்ல முடியும். எனவே ‘மூக்குத்தி அம்மன்’ ரிலீசான பிறகு ரம்யா கிருஷ்ணனா? நயன்தாராவா? என்பதை ஒப்பீடு செய்வதே சரியாக இருக்கும்

Get Breaking News Alerts From IndiaGlitz