close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

கமல்ஹாசனின் 'இந்தியன் 2': விவேக், நெடுமுடிவேணு கேரக்டர்களில் இந்த இரு பிரபலங்களா?

Monday, August 8, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’இந்தியன் 2’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறவில்லை என்ற நிலையில் தற்போது செப்டம்பர் மாதம் இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தின் பயிற்சிக்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளதாகவும் அவர் விரைவில் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வந்த விவேக் மற்றும் நெடுமுடி வேணு ஆகிய இருவரும் காலமாகி விட்டதால் அதற்கு பதிலாக மாற்று நடிகர்களை தேடும் பணியில் ஷங்கர் மற்றும் அவருடைய குழுவினர் ஈடுபட்டு வந்ததாக கூறப்பட்டது.

தற்போது வந்த தகவலின்படி விவேக் கேரக்டரில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க இருப்பதாக தெரிகிறது. சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், விஜயகாந்த், சரத்குமார், அஜித், தனுஷ் உள்ளிட்ட பல பிரபலங்களுடன் நடித்த கார்த்திக் முதல் முறையாக கமல்ஹாசனுடன் இணைந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

அதேபோல் நெடுமுடிவேணு நடித்த கேரக்டரில் குரு சோமசுந்தரம் நடிக்க இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே சுமார் 60% படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் ’இந்தியன் 2’ படப்பிடிப்பை இவ்வருடத்தில் முடித்து அடுத்த ஆண்டு இந்த ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். கமல்ஹாசன், சித்தார்த், சமுத்திரக்கனி, ஸ்ரேயா சரண், ரகுல் ப்ரித்திசிங், ப்ரியா பவானி சங்கர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.