காஜல் அகர்வாலின் காதல், அக்சராஹாசனின் ஆக்சன் குறித்து ரூபன்
Tuesday, August 1, 2017 தமிழ் Comments
தல அஜித் நடித்து முடித்துள்ள 'விவேகம்' படம் ஒரு அதிரடி ஆக்சன் படம் என்றாலும் இந்த படம் ஒரு அழுத்தமான கணவன் - மனைவி காதலையும் கொண்ட படம் என்று எடிட்டர் ரூபன் நமக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நான் இதுவரை பணிபுரிந்த படங்களில் கணவன், மனைவி காதலை மிக அழகாக வெளிப்படுத்திய படங்களில் ஒன்றுதான் 'விவேகம்'. இந்த படத்தின் பாடலை கேட்கும்போதே காஜல் அகர்வாலின் கேரக்டர் புரிந்திருக்கும். உன்னோடு வாழ்வது ஆனந்தமே, ஒவ்வொரு பொழுதிலும் பேரின்பமே' என்பதிலேயே அவர்களுடைய காதலின் முழுமை புரியும்
மேலும் இயக்குனர் சிவா இதுவரை தனது படங்களில் ரொமான்ஸ் காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்று கூறப்படுவதுண்டு. ஆனால் அதை இந்த படம் உடைத்து, ஒரு முழுமையான காதல் காட்சிகள் கொண்ட படமாக இருக்கும்.
மேலும் அக்சராஹாசன் கேரக்டர் குறித்து கூறும்போது அவர் ஒரு ஆக்சன் ஹீரோயினியாக இந்த படத்தில் நடித்துள்ளார். தல அஜித் பின்னால் ரன்னிங் பைக்கில் உட்கார்ந்து அவர் செய்திருக்கும் ஆக்சன் காட்சிகளில் அதிக ரிஸ்க் எடுத்துள்ளார். இந்த படத்தில் அக்சராவின் கேரக்டர் மிக முக்கியமான ஒன்று என்றும், அவரது கேரக்டர் இந்த படத்தில் ஒரு த்ரில்லை உண்டாக்கி செல்லும் என்றும் ரூபன் மேலும் தெரிவித்துள்ளார்