close
Choose your channels
Viruman
Laal

ரிலீசுக்கு தயாரான விஷ்ணு விஷாலின் அடுத்த படம்: நாளை ஒரு சர்ப்ரைஸ்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷ்ணு விஷால் நடித்த 'எப்.ஐ.ஆர்’ திரைப்படம் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் திரையரங்குகளிலும், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஓடிடியிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது தெரிந்ததே

இந்த நிலையில் விஷ்ணு விஷாலின் அடுத்த திரைப்படமும் ரிலீசுக்கு தயாராகி விட்டதாக தெரிய வந்துள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் உருவான ’மோகன்தாஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில் தற்போது இந்த படத்தின் புரமோஷன் பணிகளை தொடங்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்

முதற்கட்டமாக இந்த படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்றும் இந்த டீசரில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. எப்.ஐ.ஆர் படத்தை தொடர்ந்து ’மோகன்தாஸ்’ திரைப்படமும் விஷ்ணு விஷாலுக்கு ஒரு வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முரளி கார்த்திக் ஒளிப்பதிவில், சுந்தரமூர்த்தி இசையில், விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவில், கிருபாகரன் புருஷோத்தமன் படத்தொகுப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.