close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

இருளுக்கு முடிவுண்டு, எங்களுக்கு விடிவுண்டு: உதயநிதிக்கு வாழ்த்து கூறிய பிரபல நடிகர்!

Saturday, May 8, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் நடைபெற்று முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சியை பிடித்துள்ளது என்பதும், அக்கட்சியின் தலைவர் முக ஸ்டாலின் நேற்று முதல்வராக பதவியேற்று அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்

இந்த நிலையில் திமுக தலைவரின் மகனும் நடிகருமான உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து அவருக்கும் திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

அந்த வகையில் தமிழ் திரையுலகில் ஹீரோக்களில் ஒருவரும் உதயநிதியின் நெருங்கிய நண்பருமான நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மூலம் வெற்றி பெற்ற திமுகவுக்கும் உதயநிதிக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

மேலும் அவர் உதயநிதியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் தனது வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது: விடிவெள்ளி தான் முளைக்கும் வரை இருள் மட்டும் ஆட்சியில் இருக்குமடா, கிழக்கு முகம் வெளுத்ததனால் இருளுக்கு முடிவுண்டு எங்களுக்கு விடிவுண்டு

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.