close
Choose your channels
aranmanai

ஹீரோவை விட வில்லன் தான் மாஸ்.. பூர்ணிமாவை ஏத்தி விடும் போட்டியாளர்..!

Tuesday, November 28, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக் பாஸ் நிகழ்ச்சி 57 நாட்கள் முடிவடைந்து இன்று 58 வது நாள் நடைபெற இருக்கும் நிலையில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இறுதி போட்டியை நோக்கி செல்ல தீவிரமாக விளையாடி வருகின்றனர். இரண்டு எக்ஸ் போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்தவுடன் நிகழ்ச்சி விறுவிறுப்பாக என்றும் எதிர்பார்க்கப்பட்டது

இந்த நிலையில் மாயா மற்றும் பூர்ணிமா ஆகிய இருவரும் இணைந்து ஆரம்பம் முதல் விளையாடி வரும் நிலையில் தற்போது பூர்ணிமா தனித்து விளையாட முடிவு செய்திருப்பதாக தெரிகிறது

இந்த நிலையில் பூர்ணிமாவுக்கு சில அட்வைஸ்கள் விஷ்ணு கூறும் காட்சிகள் இன்றைய முதல் புரமோவில் உள்ளன. அதில் ’திரைப்படங்களில் மாசான வில்லன் தான் அந்த படத்தையே தூக்கி நிப்பாட்டுவார், ஹீரோவை விட அதிக வெயிட்டேஜ் மாசான வில்லனுக்கு இருந்தால் மட்டும்தான், அந்த படம் சூப்பர் ஹிட் ஆகும். எனவே என்னை வில்லனா கூட பார்த்துக் கொள்ளுங்கள், நான் கடைசி வரை இருப்பேன் என்று கூறினார்

அப்போது பூர்ணிமா ’இப்ப வரைக்கும் நான் நானாகத்தான் இருக்கிறேன், இந்த ஷோவுக்காக யாருடன் சேர்ந்து எதுவும் பண்ணவில்லை’ என்று கூறுகிறார் அதன் பிறகு தனியாக வந்த அவர் ’இப்ப நானும் விஷ்ணுவும் பேசுவதை பார்த்தால், விஷ்ணு என்னை கண்ட்ரோல் பண்றாருனு நினைப்பாங்க’ என்று கூறுவதுடன் இன்றைய புரமோ முடிவுக்கு வருகிறது.

இதுவரை மாயாவுடன் இணைந்து விளையாடிக் கொண்டிருந்த பூர்ணமா, இனிமேல் விஷ்ணுவுடன் இணைந்து விளையாடுவாரா? அல்லது தனித்து விளையாடி தன்னுடைய தனி திறமையை வெளிப்படுத்துவாரா? என்பதை இனி வரும் எபிசோடுகளில் தான் தெரியவரும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Login to post comment
Cancel
Comment