close
Choose your channels
IKK
Jail

விஷாலின் 'வீரமே வாகை சூடும்' படத்தின் முக்கிய அப்டேட்!

Sunday, October 24, 2021 • தமிழ் Comments

விஷால், ஆர்யா நடித்த ’எனிமி’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் அவர் நடித்து வரும் மற்றொரு திரைப்படமான ’வீரமே வாகை சூடும்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் சமீபத்தில் தொடங்கிய நிலையில் தற்போது இந்த படத்தின் டப்பிங் பணிகள் முழுவதுமாக முடிந்து விட்டதாக படக்குழுவினர்களிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளன.

து.பா.சரவணன் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் விஷால், யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி, உள்பட பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர்ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளது என்பது குறிபிடத்தக்கது. இந்த படம் அனேகமாக பொங்கல் திருநாளில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz