close
Choose your channels
Por
Joshwa

விஷாலின் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு எப்போது? புதிய தகவல்..!

Sunday, December 10, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஷால் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவான ’துப்பறிவாளன்’ திரைப்படம் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் குறித்து அறிவிப்பு 2019 ஆம் ஆண்டு வெளியானது.

இந்த படத்தின் படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திடீரென மிஷ்கின் மற்றும் விஷால் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டது

இதனை அடுத்து 2020 ஆம் ஆண்டு இந்த படத்தின் மீதி உள்ள காட்சிகளை தானே இயக்கப் போவதாக விஷால் அறிவித்திருந்த போதிலும் இந்த படத்தின் படப்பிடிப்பு அதன் பிறகு நடைபெறவில்லை.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இருப்பதாகவும் அதற்கான ஆரம்பகட்ட பணிகளை இன்னும் ஓரிரு மாதங்களில் தொடங்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர்.

ஹரி இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் ’ரத்னம்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் முழு வீச்சில் ’துப்பறிவாளன் 2’ படத்தின் படப்பிடிப்பில் விஷால் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.