close
Choose your channels

தீபாவளி ரேஸில் இணைந்த விஷால் படம்! மும்முனை போட்டி!

Tuesday, October 12, 2021 • தமிழ் Comments

வரும் தீபாவளி திருநாளில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ மற்றும் சிம்பு நடித்த ’மாநாடு’ ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளியாவது உறுதி என்ற நிலையில் தற்போது மூன்றாவதாக விஷாலின் படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் சிம்பு நடித்த ’மாநாடு’ திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்றும் அந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது மூன்றாவது படமாக விஷாலின் ’எனிமி’ படமும் தீபாவளி அன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து வெளியாகியுள்ள வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ரஜினியின் ’அண்ணாத்த’ சிம்புவின் ’மாநாடு’ மற்றும் விஷாலின் ’எனிமி’ ஆகிய 3 படங்கள் வெளியாக உள்ளது அடுத்து வரும் தீபாவளிக்கு மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Get Breaking News Alerts From IndiaGlitz