close
Choose your channels
iruttu
Capmaari

விஷாலின் 'ஆக்சன்' அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி!

Tuesday, November 5, 2019 • தமிழ் Comments

விஷால், தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள ’ஆக்சன்’ திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த டிரைலர் ரிலீசுக்கு பின் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக இந்த படம் ஆக்சன் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் முடிவடைந்து ரிலீஸூக்கு தயாராக உள்ள நிலையில் இந்த படம் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. அதனை உறுதி செய்வதை போல் சற்றுமுன் இந்த படம் நவம்பர் 15ஆம் தேதி வெளியாகவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு ரிலீஸ் தேதியுடன் கூடிய அட்டகாசமாக போஸ்டரும் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது. இதே தேதியில் தான் விஜய்சேதுபதியின் ‘சங்கத்தமிழன்’ திரைப்படம் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

விஷால், தமன்னா, கபீர் சிங், ஐஸ்வர்யா லட்சுமி, யோகி பாபு, சாயாசிங், ராம்கி, பழகருப்பையா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். டட்லி ஒளிப்பதிவில் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்துள்ளார்.

Get Breaking News Alerts From IndiaGlitz