close
Choose your channels
anabel
friendship

விஷால் படத்தில் இணைந்த விஜய் பட பிரபலம்

Wednesday, October 19, 2016 • தமிழ் Comments

இளையதளபதி விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான 'தெறி' படத்திற்கும், தற்போது அவர் நடித்து வரும் 'பைரவா' படத்திற்கும் காஸ்ட்யூம் டிசைனராக சத்யா பணியாற்றி வருகிறார் என்பது ஏற்கனவே தெரிந்ததே.
இந்நிலையில் அறிமுக இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் விஷால் நடிக்கவுள்ள 'இரும்புத்திரை' படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றது. இந்த படத்தில் விஷாலுக்கு காஸ்ட்யூம் டிசைனராக பணிபுரிய சத்யா ஒப்பந்தமாகியுள்ளார். இந்த தகவலை சத்யா தனது சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
விஷால்,சமந்தா முதல்முறையாக இணைந்து நடிக்கவுள்ள இந்த படத்தில் ஆர்யா வில்லனாக நடிக்கவுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசையமைக்கும் இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz