close
Choose your channels
iruttu
Capmaari

பால்வாக்கர் மகளுக்கு நெகிழ்ச்சியான மெசேஜ் அனுப்பிய வின் டீசல்

Wednesday, November 6, 2019 • தமிழ் Comments

ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படங்களின் சக நடிகர்களாக மட்டுமின்றி நெருக்கமான நண்பர்களாகவும் இருந்தவர்கள் வின் டீசல் மற்றும் பால் வாக்கர். கடந்த 2013ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் பால் வாக்கர் மரணம் அடைந்தபோது, வின் டீசல் மிகவும் அதிர்ச்சி அடைந்தார்.

இந்த நிலையில் பால்வாக்கர் மரணத்திற்கு பின்னரும் அவருடைய குடும்பத்தினர்களுடன் நெருக்கமாக இருந்து வரும் வின் டீசல், சமீபத்தில் பால் வாக்கரின் மகள் மெடோ வாக்கர் தனது 21வது பிறந்த நாளை கொண்டாடியபோது தனது சமூக வலைத்தள பக்கத்தின் மூலம் அவருக்கு நெகிழ்ச்சியான மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.’21ஆம் வயதில் அடியெடுத்து வைக்கும் உன்னை வாழ்த்துவதோடு, தற்போது ஜப்பானில் இருக்கும் நீ, வாழ்வில் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். மேலும் மெடோ வாக்கருடன் தனது நான்கு வயது மகள் இருக்கும் புகைப்படத்தையும் வின் டீசல் பதிவு செய்துள்ளார். வின் டீசலின் வாழ்த்துக்கு மெடோ வாக்கர் தனது நன்றியை தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் ‘பாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ படத்தின் 9வது பாகத்தில் வின் டீசல் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get Breaking News Alerts From IndiaGlitz