close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

விக்ரம் பிரபுவின் 'டாணாக்காரன்' ரிலீஸ் அறிவிப்பு!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‘டாணாக்காரன்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த படத்தின் டீசரை பார்த்த பலரும் இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுவதாக தெரிவித்தனர் என்பதும் காவல்துறையில் சேர விரும்பும் இளைஞர்கள் எந்த அளவிற்கு துன்பத்திற்கு உள்ளாகிறார்கள் என்பதை தத்ரூபமாக இந்த படம் எடுத்துக் கூறியதாகவும் பலர் கருத்து தெரிவித்தனர்

இந்த நிலையில் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முயற்சி செய்தபோதிலும் ஹாட் ஸ்டார் ஓடிடியில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

விக்ரம்பிரபு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடித்துள்ள இந்த படத்தை தமிழ் என்பவர் இயக்கி உள்ளார் என்பதும் ஜிப்ரான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.