close
Choose your channels

வைரலாகும் வதந்திக்கு விக்ரம் படகுழுவினர் வைத்த முற்றுப்புள்ளி

Saturday, December 7, 2019 • தமிழ் Comments

விக்ரம் நடிப்பில் ’இமைக்காநொடிகள்’ அஜய் ஞானமுத்து இயக்கி வரும் ’விக்ரம் 58’ என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இசையமைத்து வரும் இந்த படத்தை 7ஸ்க்ரீன் என்டர்டைன்மென்ட் மற்றும் பயாகான் 18 ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன

இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் ’அமர்’ என்று ஒருசில ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்துள்ளன. ஆனால் இந்த செய்தி முற்றிலும் வதந்தி என்றும் இன்னும் இந்த படத்திற்கு டைட்டில் முடிவு செய்யப்படவில்லை என்றும் படக்குழுவினர் மறுப்பு தெரிவித்து வைரலாகி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்

‘விக்ரம் 58’ படத்தில் விக்ரம் பல்வேறு தோற்றங்களில் நடித்து வருவதால் மேக்கப்பிற்கு என தனியாக டீம் ஒன்று இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2020ஆம் ஆண்டு கோடை விடுமுறையில் இந்த படத்தை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படத்தை அடுத்து மணிரத்னம் இயக்கவுள்ள ’பொன்னியின் செல்வன்’ படத்தில் விக்ரம் முக்கிய கேரக்டரில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Get Breaking News Alerts From IndiaGlitz