close
Choose your channels
PatamPoochi
mayoon

உதயநிதியின் 'மாமன்னன்' படத்தில் இணைந்த 'விக்ரம்' பட நடிகர்!

Monday, May 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உதயநிதி ஸ்டாலின் நடிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘மாமன்னன்’ என்ற படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர் படப்பிடிப்பில் இணைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகிவரும் ‘மாமன்னன்’ படத்தில் முக்கிய வேடத்தில் பகத் பாசில்  நடிக்க இருப்பதாகவும், அதுமட்டுமின்றி வைகைப்புயல் வடிவேலு இந்த படத்தில் ஒரு கேரக்டரில் நடித்து வருவதாகவும் வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உதயநிதி, கீர்த்தி சுரேஷ் காட்சிகளின் படப்பிடிப்பு நடந்த நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பில் பகத் பாசில் இணைந்துள்ளார். இவர் வரும் 3ஆம் தேதி வெளியாக இருக்கும் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார்.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாகிவரும் இந்த படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.