close
Choose your channels
NMM
NMM

அப்படியா சொன்னேன்: ஆச்சரியமாக கேட்ட இயக்குனர் அஜய் ஞானமுத்து!

Tuesday, December 22, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா ரசிகர்களைப் பொறுத்தவரை தங்களுடைய விருப்பத்துக்குரிய நடிகர் நடித்து வரும் திரைப்படங்களின் அப்டேட்டுக்களை கேட்டு சமூக வலைதளங்களில் பதிவு செய்வது ஒரு வாடிக்கையாகிவிட்டது. குறிப்பாக அஜித் ரசிகர்கள் ’வலிமை’ படத்தின் அப்டேட்டை கடந்த ஒரு வருடமாக கேட்டு கொண்டே இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் அஜித் ரசிகர்களை அடுத்து தற்போது விக்ரம் ரசிகர்களும் அவர் நடித்து வரும் ’கோப்ரா’ படத்தின் அப்டேட்களை கேட்டு பதிவு செய்ய தொடங்கிவிட்டனர். ஒரு விக்ர்ம் ரசிகர் சற்று வித்தியாசமாக ’கோப்ரா’ இயக்குனர் அஜய் ஞானமுத்துவின் டுவிட்டர் பக்கத்தை டேக் செய்து ’நேற்று இரவு சரியாக 12.30 மணிக்கு என்னுடைய கனவில் நீங்கள் வந்து கிறிஸ்மஸ் அன்று ’கோப்ரா’ டீசர் வரும் என்று சொல்லி விட்டு போனீர்கள்’ என்று பதிவு செய்துள்ளார். மேலும் அஜய் ஞானமுத்து கிறிஸ்மஸ் தாத்தா வேடம் அணிந்தது போன்ற ஒரு புகைப்படத்தையும் அந்த ரசிகர் பதிவு செய்துள்ளார். 

இந்த புகைப்படத்தையும் அவருடைய பதிவையும் பார்த்த இயக்குனர் அஜய் ஞானமுத்து ’அப்படியா சொன்னேன்’ என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார். இருப்பினும் அவர் ’கோப்ரா’ அப்டேட் குறித்த எந்த தகவலும் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

விக்ரம், ஸ்ரீநிதிஷெட்டி, இர்பான் பதான் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை 7ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.