close
Choose your channels
Conjuring Kannappa

'துருவ நட்சத்திரம்' ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா? சரமாரியாக கட் செய்த சென்சார் அதிகாரிகள்..!

Friday, September 29, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான 'துருவ நட்சத்திரம்’ திரைப்படம் ஒரு சில ஆண்டுகளாக கிடப்பில் இருந்த நிலையில் தற்போது ரிலீசுக்கு தயாராக உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

மேலும் இந்த படம் சென்சாருக்கு சென்று வந்தது என்பதும் இந்த படத்திற்கு சென்சார் அதிகாரிகள் ’யுஏ’ சான்றிதழ் அளித்தனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரன்னிங் டைம் குறித்த தகவல் வந்துள்ளது. இந்த படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 25 நிமிடங்கள் அதாவது 145 நிமிடங்கள் என்பது தெரிய வந்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த படத்தில் 11 இடங்களில் சென்சார் அதிகாரிகள் கட் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் ஆக்சன் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் விக்ரம், ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன், திவ்யதர்ஷினி, விநாயகன், அர்ஜுன் தாஸ், ராதிகா சரத்குமார், வம்சி கிருஷ்ணா உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.