close
Choose your channels
Viruman
Laal

'தேவர் மகன் 2' படத்தில் கமலுடன் மீண்டும் இணையும் 'விக்ரம்' நடிகர்?

Friday, June 24, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்க உள்ள 'தேவர் மகன் 2’ படத்தில் கமல்ஹாசனின் மகனாக ‘விக்ரம்’ படத்தில் நடித்த பிரபல நடிகர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த ’தேவர்மகன்’ திரைப்படம் கடந்த 1992ஆம் ஆண்டு வெளியாகி மிகப் பெரிய வரவேற்ப்பை பெற்றது என்பதும் கௌதமி மற்றும் ரேவதி ஆகியோர் இந்த படத்தில் நாயகிகளாக நடித்து இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது இந்த படம் குறித்த ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 30 வருடம் ஆகி விட்ட நிலையில் கமல்ஹாசனின் மகன் கேரக்டர் தான் இந்த படத்தில் முக்கிய கேரக்டராக வலம்வர இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படத்தில் வில்லனாக நடித்த விஜய் சேதுபதிதான், ‘தேவர் மகன் 2’ திரைப்படத்தில் கமல்ஹாசனின் மகன் கேரக்டரில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.