close
Choose your channels
iruttu
Capmaari

'விக்ரம் 58' படத்தின் அடுத்த அப்டேட்டை அளித்த கிரிக்கெட் வீரர்

Wednesday, November 6, 2019 • தமிழ் Comments

விக்ரம் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகிய ’துருவ நட்சத்திரம்’ திரைப்படத்தின் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு படத்தில் சீயான் விக்ரம் நடித்து வருகிறார் என்பதும் இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது என்பதும் தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக வெளிவந்த செய்தியையும் நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் நடிகராக மாறி இருக்கும் இர்பான் பதான் தனது சமூக வலைத்தளத்தில் இந்த படம் குறித்த புதிய அப்டேட்டை தெரிவித்துள்ளார். இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாகவும், நடிப்பில் முதல் படி எடுத்து வைக்கும் தனக்கு உதவியாக தமிழ் மக்கள் அனைவரும் இருந்ததாகவும், அதனால் தமிழ் மக்களுக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் மீண்டும் அனைவரையும் சந்திக்க ’ஐ அம் வெயிட்டிங்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த டுவீட்டை அவர் தமிழில் பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து ’விக்ரம் 58’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக பணிகள் தொடங்கிவிட்டது உறுதியாகியுள்ளது.

Get Breaking News Alerts From IndiaGlitz