close
Choose your channels

பழைய பன்னீர்செல்வமாக வந்த கேப்டன்: மகன்களின் தோளில் கைபோட்டு முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள்

Wednesday, April 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகரும் அரசியல்வாதியுமான கேப்டன் விஜயகாந்த் புகைப்படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடையாத ரசிகர்களே இருக்க மாட்டார்கள்.அந்த அளவுக்கு அவர் மிகவும் ஒல்லியாக கண்ணாடி அணிந்து ஆளே அடையாளம் தெரியாமல் இருந்தார்.

இந்த நிலையில் இன்று கேப்டன் விஜயகாந்தின் மகனும் நடிகருமான சண்முகபாண்டியனின் பிறந்தநாளை அடுத்து இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களில் கேப்டன் விஜயகாந்த் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதும் அவர் தனது இரு மகன்களின் தோளில் கைபோட்டு முத்தம் கொடுக்கும் காட்சியும் உள்ளன.

இதனை அடுத்து ரசிகர்கள் ’பழைய பன்னீர்செல்வமாக எங்கள் கேப்டன் மீண்டு விட்டார்’ என்று கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர். விஜயகாந்த் கூடிய விரைவில் பழைய விஜயகாந்த் ஆக மாறி முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் என தொண்டர்கள் மற்றும் ரசிகர்களின் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.