தள்ளுமுள்ளு பரபரப்பிலும் ரசிகரின் காலணியை எடுத்து கொடுத்த விஜய்!
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் நேற்று மதியம் காலமான நிலையில் அவருடைய உடல் இன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது என்பது குறித்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம்
மேலும் எஸ்பிபி உடலுக்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில் தளபதி விஜய்யும் தாமரைபாக்கத்திற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தாமரைபாக்கத்தில் எஸ்பிபிக்கு அஞ்சலி செலுத்திவிட்டு தளபதி விஜய் திரும்பும் போது அவருடைய ரசிகர் ஒருவரின் காலணியை எடுத்து கொடுத்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது
எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்த விஜய்யை அவரது ரசிகர்கள் திடீரென சூழ்ந்தனர். இதனை அடுத்து விஜய்யை காவல்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்ற முற்பட்டபோது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் ரசிகர்கள் தடுமாறிக் கீழே விழுந்தனர். அப்போது கீழே விழுந்த ரசிகர் ஒருவரின் காலணியை விஜய் தாமாகவே முன்வந்து எடுத்துக் கொடுத்த சம்பவம் ரசிகர்களிடையே பெரும் நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
"ரசிகனின் காலணிகளை எடுத்து கொடுத்த விஜய்" - நெகிழ்ச்சியில் ரசிகர்கள்#Vijay | #SPB pic.twitter.com/77A1RlPnKY
— Thanthi TV (@ThanthiTV) September 26, 2020