close
Choose your channels
siren
lal_salaam

விஜய் டிவியின் முக்கிய சீரியல் நடிகை திடீர் மாற்றம்.. அவருக்கு பதில் இவரா?

Friday, November 24, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியலில் நடித்து வரும் நடிகை திடீரென மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் அவருக்கு பதில் நடிக்க இருக்கும் நடிகை குறித்த தகவலும் தற்போது கசிந்து உள்ளது.

விஜய் டிவி சீரியல்களில் பிரபலமாக இருக்கும் சீரியலில் ஒன்று ’மகாநதி’. கடந்த ஜனவரி மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார் என்பதும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் நாளுக்கு நாள் எதிர்பாராத திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் ’மகாநதி’ சீரியலில் கங்கா என்ற முக்கிய கேரக்டரில் நடித்து வரும் பிரதீபா சீரியலை விட்டு விலக உள்ளதாக கூறப்படுகிறது. அவருக்கு பதிலாக ’பாக்கியலட்சுமி’ சீரியலில் நடித்து வரும் திவ்யா கணேஷ் நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது.

பிரதீபா ஏன் திடீரென இந்த சீரியலில் இருந்து விலகுகிறார் என்று தெரியவில்லை என்றாலும் கங்கா கேரக்டருக்கு திவ்யா கணேசனும் பொருத்தமாக இருப்பார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜய் டிவி விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.