close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு இத்தனை லட்சமா?

Friday, August 5, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவுக்கு இருக்கும் சொத்து மதிப்பு குறித்த தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

ஆர்ஜே அர்ச்சனா கடந்த 1999ஆம் ஆண்டு கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும்போதே ஜெயா டிவியில் செய்தி வாசிப்பாளராக பணி செய்தார். அதன்பின் சன் டிவியில் இளமை புதுமை, நகைச்சுவை நேரம் போன்ற நிகழ்ச்சிகளில் ஆர்ஜேவாக பணிசெய்தார்.

அதன்பின் திருமணம், குழந்தை காரணமாக சில வருடங்கள் இடைவெளிவிட்ட ஆர்ஜே அர்ச்சனா, மீண்டும் விஜய் டிவியில் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். பின்னர் விஜய் டிவியிலிருந்து ஜீ தமிழ் சேனலுக்கு சென்ற ஆர்ஜே அர்ச்சனா, மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் டிவிக்கு வந்தார் என்பதும் தற்போது அவர் விஜய் டிவியில் பிரபலமான ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொலைக்காட்சி மட்டுமின்றி சினிமாவிலும் அவர் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் ஆர்ஜே அர்ச்சனா தனது மகளுடன் சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தில் நடித்தார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக சின்னத்திரையில் இருக்கும் ஆர்ஜே அர்ச்சனாவின் சொத்து மதிப்பு சுமார் 30 லட்சம் முதல் 50 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுவது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.