close
Choose your channels
Viruman
Laal

பிரபல கிரிக்கெட் வீரரை சந்தித்த விஜய்டிவி புகழ்: வைரல் புகைப்படங்கள்!

Wednesday, March 9, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், பிரபல கிரிக்கெட் வீரர் அழைப்பின் பேரில் அவருடைய இல்லத்திற்கு சென்ற புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன.

குக் வித் கோமாளி உள்பட ஒரு சில நிகழ்ச்சிகளின் மூலம் பிரபலமடைந்த விஜய் டிவி புகழ், தற்போது சினிமாவில் பிசியான காமெடி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பதும், அவர் ஒரே நேரத்தில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி கிரிக்கெட் வீரரும் ஐதராபாத் அணியை சேர்ந்தவரும், யார்க்கர் கிங் என்று அழைக்கப்படுபவருமான நடராஜன், விஜய் டிவி புகழ் தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளார். அந்த அழைப்பை ஏற்று புகழ், நடராஜன் இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்த புகைப்படங்கள் நடராஜனின் இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகின்றன.

புகழ் தனது இல்லத்திற்கு வருகை தந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்றும் அவரை சுற்றி உள்ள இடம் முழுவதுமே நகைச்சுவையாக இருக்கிறது என்றும் நடராஜ் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.