close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

விஜய் டிவி பிரபலத்தின் 2வது மனைவி வளைகாப்பு புகைப்படங்கள்!

Wednesday, June 29, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நவீனுக்கு இரண்டாவது திருமணம் நடந்ததாக யாருக்குமே தெரியாத நிலையில் தற்போது அவரது இரண்டாவது மனைவியின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பெறுகின்றன.

’கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியில் பிரபலமான நவீன் கடந்த 2016 ஆம் ஆண்டு திவ்யலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் திடீரென அவருக்கு கிருஷ்ணகுமாரி என்பவருடன் நெருக்கம் ஏற்பட்டதை அடுத்து 2018 ஆம் ஆண்டு கிருஷ்ண குமாரியை திருமணம் செய்ய முயற்சித்தார். ஆனால் நவீனின் முதல் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் நவீன் கைது செய்யப்பட்டு அதன் பின் ஜாமினில் வெளிவந்தார்.

இந்த நிலையில் நவீன் மற்றும் கிருஷ்ணகுமாரி ஆகிய இருவருக்கும் நெருக்கம் தொடர்ந்து வருவதாக கூறப்பட்டன. இருப்பினும் நவீன் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்ததாகவோ, கிருஷ்ணகுமாரியை இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக எந்தவிதமான தகவலும் இல்லை.

இந்த நிலையில் கிருஷ்ணகுமாரியின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வரும் நிலையில் நவீன் கிருஷ்ணகுமாரி திருமணம் நடந்துவிட்டது என்று கூறப்படுகிறது. இருப்பினும் அவர் தனது முதல் மனைவியை சட்டப்படி விவாகரத்து செய்து விட்டார் என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.