close
Choose your channels
Viruman
Laal

'குக் வித் கோமாளி' மணிமேகலை சொத்துமதிப்பு இத்தனை கோடியா?

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சன் டிவியில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி தற்போது கிட்டத்தட்ட விஜய் டிவியின் செட்டிலாகிவிட்ட மணிமேகலையின் சொத்து மதிப்பு குறித்த தகவல் கசிந்து உள்ள நிலையில் இத்தனை கோடியா என ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

குக் வித் கோமாளி உள்பட ஒருசில விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் மணிமேகலை தனியாக யூடியூப் சேனல் ஒன்று நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவர் அதிகமான வீடியோக்களை பதிவு செய்து வருகிறார்.

விஜய் டிவியில் இருந்து வரும் வருமானத்தை விட தனது யூடியூப் சேனல் மூலம் அவர் அதிக வருமானத்தை பெற்று வருவதாக கூறப்படுகிறது. சுவாரஸ்யமான வீடியோக்களை அவர் அவ்வப்போது பதிவு செய்து வருவதால் அவரது யூடியூப் சேனலுக்கு லட்சக்கணக்கில் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் யூடியூப் வருமானம் மற்றும் விஜய் டிவி வருமானம் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து மணிமேகலையின் சொத்து மதிப்பு சுமார் ரூபாய் 8 கோடி முதல் 35 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்றாலும் மணிமேகலையின் சொத்து மதிப்பு கடந்த சில ஆண்டுகளில் அதிகரித்துள்ளது உண்மைதான் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.

அதேபோல் விஜய் டிவியின் இன்னொரு பிரபலமான பிரியங்கா, பிக்பாஸ், சூப்பர் சிங்கர் உள்பட பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருவதால் இவருக்கும் கோடிக்கணக்கான சொத்து இருப்பதாக கூறப்படுகிறது. இவரது சொத்து மதிப்பு சுமார் 9 கோடி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

விஜய் டிவியில் சேர்ந்தாலே வாழ்க்கையில் செட்டிலாகி விடலாம் என்ற எண்ணம் பலருக்கு தோன்றும் வகையில் இவர்களது சொத்து மதிப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.