close
Choose your channels
anabel
friendship

25 வருடங்களாக எனக்கு அப்பாவும் இவர்தான்: விஜய் டிவி ஜாக்குலினின் நெகிழ்ச்சியான பதிவு!

Sunday, June 20, 2021 • தமிழ் Comments

விஜய் டிவியில் ஒளிபரப்பான ’கலக்கப் போவது யாரு’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ரக்‌ஷனுடன் கலந்து கொண்டவர் ஜாக்குலின் என்பதும், ரக்‌ஷன் மற்றும் ஜாக்குலின் ஆகிய இருவரும் சேர்ந்து மிகச் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் ஒரு சில திரைப்படங்களில் நடித்தது மட்டுமன்றி தற்போது தொலைக்காட்சி சீரியல்களிலும் ஜாக்குலின் நடித்து வருகிறார் என்பதும், அவர் நடித்து வரும் ’தேன்மொழி’ என்ற தொலைக்காட்சி சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இன்று தந்தையர் தினத்தை முன்னிட்டு திரையுலக பிரபலங்கள் பலர் தங்களுடைய தந்தையின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் ஜாக்குலின் தனது தாயார் மற்றும் சகோதரர் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படத்தில் அவர் கூறியிருப்பதாவது: இது என்னுடைய மிகவும் சிறப்பு வாய்ந்த புகைப்படம்… என் அழகான சிறிய குடும்பம். என் அம்மா, அவர் கடந்த 25 ஆண்டுகளாக எனக்கு ஒரு தந்தையாகவும், என் தாயாகவும் இருந்து வருகிறார். என் பலமும் அவர் தான். என் சகோதரர், அவர் எங்கள் குடும்பத்தின் ஆம்பள. அவரை லிட்டில் தந்தை என்றும் சொல்லலாம். மேலும் ஷா, எனக்கு எப்போதும் ஆதரவாக இருக்கும் ஒரு நபர் என்று பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புகைப்படத்தில் உள்ள ஒரு புகைப்படத்தில் ஜாக்குலின் தந்தையும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.,
 

Get Breaking News Alerts From IndiaGlitz