'இனிமேல் தான் காதலிக்க போகிறேன்': இன்று திருமணம் செய்யும் விஜய் டிவி பிரபலம்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
விஜய் டிவி பிரபலத்திற்கு இன்று திருமணம் நடைபெற இருக்கும் நிலையில் எங்களது திருமணம் அரேஞ்ச் மேரேஜ் என்றும் இனிமேல் தான் என்னுடைய மனைவியை நான் காதலிக்க போகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
விஜய் டிவியில் ’கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தீனா. அதன் பிறகு விஜய் டிவியின் பல நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பதும் ஒருசில சினிமாவில் நடித்தார் என்பது தெரிந்ததே. குறிப்பாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான ’கைதி’ திரைப்படத்தில் கார்த்தியுடன் இவர் நடித்திருந்தார் என்பதும் இந்த படத்தில் இவரது கேரக்டருக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் தனது சொந்த ஊரில் தீனா வீடு கட்டிய நிலையில் இன்று தனது திருமணம் என்றும் குறிப்பிட்டுள்ளார். பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றும் தன்னுடைய வருங்கால மனைவி ஒரு கிராபிக் டிசைனர் என்றும் இனிமேல் தான் என்னுடைய மனைவியை நான் காதலிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் திருவாரூரில் இன்று திருமணம் நடைபெற இருப்பதாகவும் விரைவில் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கும் என்றும் தீனா தெரிவித்துள்ளார். இதனை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout