close
Choose your channels
naaney_varuven
Ponniyin_Selvan
Buffoonn

'என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க: விஜய் டிவி பிரபலத்தின் வீடியோ வைரல்!

Sunday, August 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னை ரொம்ப கொடுமை கொடுமைப்படுத்துறாங்க என விஜய் டிவி பிரபலம் ஒருவர் கூறும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு உள்ளிட்ட ஒருசில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளினியாக இருந்தவர் ஜாக்குலின். இவர் தேன்மொழி உள்ளிட்ட ஒருசில தொடர்களிலும் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைத்து உள்ள ஜாக்குலின் தன்னை ஜிம் பயிற்சியாளர் கொடுமைப்படுத்துவதாக காமெடியுடன் கூறிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் அவர், ‘என்னை ரொம்ப கொடுமைப்படுத்துறாங்க, என்னால சுத்தமாக முடியவில்லை, மூச்சு வாங்குது. வாந்தி வருகிறது என்று சொன்னால் கூட கொஞ்சம் கூட யோசிக்க மாட்டேன் என்கிறார்கள், வாந்தி எடுத்துவிட்டு வாருங்கள் என்கிறார்கள். கேட்டா எல்லாம் நார்மல் தான் என்று சொல்றாங்க, என்னால் மூன்று நாளா எழுந்திருக்க முடியவில்லை’ என்று அந்த வீடியோவில் ஜாக்குலின் கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.