விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9.. டைட்டில் வென்ற போட்டியாளர்..!


Send us your feedback to audioarticles@vaarta.com


விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 இறுதிப் போட்டி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் சென்னையில் நடைபெற்றது.
தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் டிவியில், பல வருடங்களாக வெற்றி நடை போட்டு வருகிற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, தமிழ் இசை உலகில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிகழ்ச்சி மூலம் அறிமுகமான திறமையாளர்கள், சங்கீதத்தின் அனைத்துத் துறைகளிலும் கோலோச்சி வருகிறார்கள். தமிழ்த் திரையுலகிலும் பாடகர்களாக சூப்பர் சிங்கர் பாடகர்கள் ஜொலித்து வருகின்றனர்.
இந்த பிரம்மாண்ட விழாவில் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் போட்டியாளர்கள் ஶ்ரீநிதா, ஹர்ஷினி, ரிச்சா, அக்ஷரா, அனன்யா, மேக்னா ஆகிய ஆறு ஃபைனலிஸ்ட் பிரமாண்ட மேடையில் மக்கள் வெள்ளத்தில் பாடி தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் இறுதிப் போட்டியில் டைட்டில் மற்றும் அறுபது லட்சம் வீட்டை பரிசாக வென்றவர் ஶ்ரீநிதா. இரண்டாவது இடத்தை வென்றவர் ஹர்ஷினி இவர் பத்து லட்சம் பரிசுத்தொகை வென்றார். மூன்றாவது இடத்தை வென்றவர் அக்ஷரா இவருக்கு ஐந்து லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது.
மேலும் மற்ற மூன்று போட்டியாளர்களாக ரிச்சா, அனன்யா, மேக்னா ஆகியோருக்கு தலா மூன்று லட்சம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை பொருத்தமட்டில் இதில் கலந்து கொண்ட பெரும்பான்மையானவர்களுக்கு திரைப்பட வாய்ப்புகள் ஏராளமாக வந்து அவர்கள் தமிழ் திரையுலகில் பேர் சொல்லும்படி திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. மாற்றங்களை நிகழ்த்தி, மனங்களை நெகிழச் செய்த சூப்பர் சிங்கர் ஜூனியர் 9 வது சீசன் !!
இந்த முறை நடந்த சீசனில் கலந்துகொண்ட திறமையாளர்கள் பலருக்கு நிகழ்ச்சி முடிவடையும் முன்னதாகவே திரைப்படத்தில் பாடல் பாடும் வாய்ப்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அன்னபூரணி படத்தில் ஶ்ரீநிதா ஷிவாத்மிகா, ஹர்ஷினி, கோகுல் ஆகிய நால்வரும் இணைந்து ஒரு அட்டகாசமான பாடலைப் பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடுவராக கலந்து கொண்ட இசையமைப்பாளர் தமன் மற்றும் இசையமைப்பாளர் இமான் மூலமும் பல குழந்தைகளுக்குப் பாடல் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்த சீசனில் பல அற்புதமான நெகிழ்ச்சியான சம்பவங்களும் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. ஒவ்வொரு குரலும் ஒரு கதை சொல்லும் எனும் பகுதி பலரின் மனதைத் தொட்டது. மிமிக்ரியில் கலக்கிய, எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி ஹர்ஷினி நேத்ரா, கானாவில் கலக்கிய கலர்வெடி கோகுல், தன் குரலால் கலக்கிய அக்ஷரா என பாடகர்கள் கலக்கிய தருணங்கள் இணையம் முழுக்க வைரலானது.
பல திறமையாளர்களுக்கான அடையாளமாக மாறி, பல அற்புத தருணங்களால் களைகட்டிய சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 9 ஃபைனல் டிசம்பர் 10 அன்று விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. திரை உலகின் மிகப் பிரபல பாடகர் பிரதீப் குமாரின் பாடல் சூப்பர் சிங்கர் மேடையில் பாடப்பட்டபோது மக்கள் மிகவும் ரசித்தனர். மேலும் ஏராளமான பிரபலங்கள் இந்த இறுதிப் போட்டி மேடையில் பாடினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments