கமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து நேற்று அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ’கமலஹாசன் 60’ என்ற பெயரைக் கொண்ட இந்த பாராட்டு விழாவில் இசைஞானி இளையராஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிலையில் இந்த விழாவில் கலந்து கொண்ட மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பேசியதாவது: மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் பெயரே எனக்கு பிடித்துள்ளது. கமலஹாசன் அரசியலுக்கு வந்ததை நான் வரவேற்கின்றேன். எல்லோரும் இணைந்து இருப்போம் என்பதையே அவரது கட்சியின் லோகோ சொல்வதாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக அவர் எப்படி ரசிகர்களை ஏமாற்றாமல் இருக்கிறாரோ, அது போல அரசியலிலும் ஏமாற்ற மாட்டார் என்று நம்புகிறேன்’ என விஜய் சேதுபதி பேசியுள்ளார்.
இந்த விழாவில் கலந்து கொள்ள முக்கிய பிரமுகர்களுக்கு பிரத்யேகமாக அச்சடிக்கப்பட்ட அழைப்பிதழ் மூலம் அழைப்பு விடுத்தது போல் விஜய்சேதுபதிக்கும் பிரத்யேக அழைப்பிதழை வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.