close
Choose your channels
LoveToday
CWK

விஜய்சேதுபதியின் சைலண்ட் படம்: வேறு யார் யாரெல்லாம் இருக்காங்க?

Sunday, October 2, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விஜய் சேதுபதி நடித்து வரும் சைலண்ட் படம் ஒன்று உருவாகி வரும் நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வீடியோ ஒன்றின் மூலம் வெளியாகியுள்ளது.

விஜய் சேதுபதி நடிப்பில் பிரபல மராத்தி இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் என்பவரது இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’காந்தி டாக்ஸ்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்ததாக கூறப்படும் நிலையில் தற்போது இது குறித்த வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

விஜய் சேதுபதியுடன் அரவிந்த்சாமி மற்றும் அதிதிராவ் ஹைத்ரி ஆகியோர் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படம் வசனமே இல்லாத டார்க் காமெடி படம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இசைப்புயல் ஏ ஆர் ரகுமானின் இசையில் உருவாகியுள்ள இந்த படத்தை ஜீடிவி நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கமல்ஹாசன், அமலா நடிப்பில் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கடந்த 1987ஆம் ஆணடு ‘பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத சைலண்ட் படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.