'மாமனிதன்' ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்: புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'மாமனிதன்’ திரைப்படம் மே 20ஆம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது அந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தயாரிப்பாளரும் நடிகருமான ஆர்கே சுரேஷ் தெரிவித்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில், இளையராஜா மற்றும் யுவன்ஷங்கர் ராஜா இணைந்து இசையமைத்த திரைப்படம் 'மாமனிதன்’. இந்த படம் ரிலீஸ்க்கு தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ரிலீஸ் ஆகாமல் இருந்தது.
இந்நிலையில் நடிகர் ஆர்கே சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்றதை அடுத்து மே 20 என ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது 'மாமனிதன்’ திரைப்படத்தை குறைந்தபட்சம் 400 திரையரங்குகளில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாகவும் அதனால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாகவும் புதிய ரிலீஸ் தேதி ஜூன் 24 என்றும் ஆர்.கே.சுரேஷ் அறிவித்துள்ளார்.
'மாமனிதன்’ ரிலீஸ் தேதி மாற்றத்திற்காக திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இடம் வருத்தம் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். இதனையடுத்து 'மாமனிதன்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மேலும் ஒரு மாதம் தள்ளிப் போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Maamanithan Release on June 24.@VijaySethuOffl @YSRfilms @SGayathrie @onlynikil @Riyaz_Ctc https://t.co/FaTRUvJsHT
— R.Seenu Ramasamy (@seenuramasamy) April 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments