close
Choose your channels
Don
Nenjukku Needhi

இன்று பூஜை. நாளை ரிலீஸ். விஜய்சேதுபதியின் லக்கி நாட்கள்

Thursday, March 10, 2016 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

'நானும் ரெளடிதான்', சேதுபதி என இரண்டு ஹிட் படங்களில் நடித்த விஜய்சேதுபதியின் அடுத்த படமான 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் நாளை தமிழகம் முழுவதும் பெருவாரியான திரையரங்குகளில் ரிலீஸ் ஆகவுள்ளது. 'சூது கவ்வும்' நலன்குமாரசாமி இயக்கிய இந்த படம் கொரிய படம் ஒன்றின் ரீமேக் என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்நிலையில் விஜய்சேதுபதி நடிக்கவுள்ள அடுத்த படத்தின் பூஜை சற்று முன்னர் நடைபெற்றது. 'காக்கா முட்டை' இயக்குனர் மணிகண்டன் இயக்கவுள்ள இந்த படத்திற்கு 'ஆண்டவன் கட்டளை' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். விஜய் சேதுபதியுடன் 'இறுதிச்சுற்று' நாயகி ரித்திகா சிங் இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.