close
Choose your channels
PatamPoochi
mayoon

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்!

Monday, November 15, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்ற நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது என்பதும் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று காலை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்திருந்த நிலையில் சற்று முன்னர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி லுக் மட்டுமே உள்ளது நயன்தாரா மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் ராம்போ என்றும் அதற்கு விரிவாக்கம் ’ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.