close
Choose your channels
Viruman
Laal

விஜய்சேதுபதியா? வில்லன் சேதுபதியா? மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் வில்லன்?

Wednesday, July 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடிகர் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த படங்கள் அனைத்துமே சூப்பர் ஹிட்டாகி வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக சசிகுமாரின் ‘சுந்தரபாண்டியன்’ திரை படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி மிரட்டிய நிலையில் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பின்னர் ’விக்ரம் வேதா’ ’செக்கச் சிவந்த வானம்’ (சைலண்ட் வில்லன்) ’பேட்ட’ ’மாஸ்டர்’ மற்றும் ’விக்ரம்’ ஆகிய படங்களில் வில்லனாக நடித்து அசத்தி உள்ளார்.

இந்த நிலையில் மேலும் இரண்டு பிரபலங்களின் படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ‘ஜவான்’ திரைப்படத்தில் ’பாகுபலி’ ராணா தான் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவர் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வருவதால் ராணாவுக்கு பதிலாக விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதேபோல் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ’புஷ்பா 2’ திரைப்படத்திலும் வில்லன் கேரக்டரில் நடிக்க விஜய்சேதுபதியை படக்குழுவினர் அணுகி இருப்பதாகவும் விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. இதே ரீதியில் சென்றால் விஜய் சேதுபதி, வில்லன் சேதுபதி ஆகிவிடுவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.